கொழும்பு நோக்கிப் பயணித்த பேருந்து விபத்து; 17 பேர் காயம்
மொனராகலை, கும்புக்கன் 14 மைல்கல் அருகில் இடம்பெற்ற விபத்தில் 17 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்து இன்று (20) இடம்பெற்றுள்ளது.
மொனராகலையிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி கவிழ்ந்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது, பஸ்ஸில் பயணித்த 17 பேர் காயமடைந்துள்ள நிலையில் மொனராகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சினிமா செய்திகள்
ALPHA திரை விமர்சனம்
04 July 2026
Anikha Surendran 's Gorgeous Traditional Look💛🌸
04 July 2026