கொழும்பின் புறநகரில் கொரோனா சந்தேகம்! 113 பேருக்கு PCR பரிசோதனை

கொழும்பின் புறநகரில் கொரோனா சந்தேகம்! 113 பேருக்கு PCR பரிசோதனை

கொழும்பின் புறநகரான பிலியந்தல பிரதேசத்தில் 113 பேர் கொரோனா சந்தேகத்தில் PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இத்தகவலை பிலியந்தல பொது சுகாதார வைத்திய அதிகாரி சுமித் மார்க் டி சில்வா கூறியுள்ளார்.

கொரோனா வைரஸ் உறுதியான இராணுவ சிப்பாய் ஒருவர் கடந்த 5ம் திகதி குறித்த பகுதிக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் அவர் உலாவிய இடங்களான வங்கி கிளை, கடைகள் என 113 பேருக்கு PCR பரிசோதனை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.