வெயிலுக்கு குளு குளுனு போஸ் கொடுத்த லொஸ்லியா! புகைப்படத்தை நீங்களே பாருங்க

வெயிலுக்கு குளு குளுனு போஸ் கொடுத்த லொஸ்லியா! புகைப்படத்தை நீங்களே பாருங்க

நடிகை லொஸ்லியா புடவையில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை மகிழ்வித்து வருகின்றது.

இலங்கை தொலைக்காட்சியில் செய்தி தொகுப்பாளராக பணியாற்றிய லொஸ்லியா, 2019ம் ஆண்டு பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றார்.

இந்த சீசனில் இரண்டாவது ரன்னராக வந்த இவர், தற்போது நடிப்பில் பயங்கர பிஸியாக நடித்து வருகின்றார். சமீபத்தில் தர்ஷனுடன் தனது பிறந்தநாளைக் கொண்டாடினார்.

பின்பு பிக்பாஸ் தமிழ் சீசன் 4 வெற்றியாளரான ஆரியின் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். தற்போது மலையாளத் திரைப்படமான ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் ver 5.25 இன் அதிகாரப்பூர்வ ரீமேக்கான கூகுள் குட்டப்பாவில் தர்ஷன், பிரபல இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், யோகி பாபு மற்றும் ஆர். பார்த்திபன் ஆகியோருடன் லொஸ்லியா நடித்து வருகின்றார்.


சமீப காலமாக லொஸ்லியா சமூகவலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் தற்போதும் புகைப்படத்தினை பதிவிட்டுள்ளார்.

தற்போது ஊதா நிற சேலையில் தன் அழகை மெருகூட்டி ரசிகர்களுக்காக அந்த போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதனை அவதானித்த ரசிகர்கள் வெயிலுக்கு குளு குளுனு போஸ் கொடுத்திருக்கிறாரே என்று வர்ணித்து வருகின்றனர்.