
சேலையில் கவர்ச்சி காட்டிய லாஸ்லியா! வைரலாகும் புகைப்படங்கள்
இலங்கையில் செய்தி வாசிப்பாளராக தன்னுடைய வேலையை தொடங்கி இன்று கோலிவுட்டின் கதாநாயகி ஆகியிருக்கிறார் லாஸ்லியா மரியநேசன்.
இலங்கை வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் பிறந்தவர் லாஸ்லியா மரியநேசன்.
குடும்ப வறுமையில் வாட, 18 வயதிலேயே செய்தி வாசிப்பாளராக பணியை தொடங்கினார், அங்கு மக்கள் மத்தியில் புகழ்பெறத் தொடங்கியதும், பிக்பாஸ் அழைப்பு சரியாக பயன்படுத்திக் கொண்டார் லாஸ்லியா.
சீசன் 3ல் கலந்து கொண்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் புகழடைந்தார், இவரது தமிழுக்காகவே பலரும் ரசிகர்கள் ஆனார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் வெள்ளத்திரையில் நடிக்க வாய்ப்புகள் வர சரியாக பயன்படுத்திக் கொண்டார் லாஸ்லியா.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்குடன் இணைந்து பிரண்ட்ஷிப் என்ற படத்தில் மூலம் அறிமுகமானார், தற்போது கூகுள் குட்டப்பா படமும் வெளியாக இருக்கிறது.
இந்நிலையில் உடற்பயிற்சியில் கவனம் செலுத்தும் லாஸ்லியா, அவ்வப்போது புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிடுவது வழக்கம்.
சமீபத்தில் சேலையில் அவர் நடத்திய போட்டோஷீட் படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
”நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அதுவாகவே நீங்கள் மாறுவீர்கள்” என்ற தலைப்புடன் சேலையில் அழகு பதுமையாய் ஜொலிக்கிறார் லாஸ்லியா.