மாடர்ன் உடையில் ரசிகர்களை கிரங்கடிக்கும் பிரியா பவானி சங்கர்! வைரல் புகைப்படங்கள்
பிரபல நடிகையான பிரியா பவானி சங்கர் இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பயணத்தை தொடங்கி கல்யாணம் முதல் காதல் வரை தொடர் மூலம் பிரபலமானவர் பிரியா பவானி சங்கர்.
அதிலிருந்தே ஏராளமான ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.
அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து முன்னணி கதாநாயகர்களின் படங்களில் நடித்து வருவதால், பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரியா பவானி சங்கர் வெளியிட்ட புகைப்படம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது, மாடர்ன் உடையில் செம ஸ்டைலாக போட்டோஷூட் நடத்தியுள்ளார் பிரியா.
இந்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட, என்ன சிம்ரன் இதெல்லாம், நீயுமா இப்படி இறங்கிட்ட, அழகு என்றெல்லாம் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.