20 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!
மன்னார் - பேசாலை, ஜூட் வீதியில் உள்ள வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 மில்லியன் ரூபா பெறுமதியான 2 கிலோகிராமிற்கும் அதிகமான ஐஸ் வகைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.
இந்தச் சுற்றிவளைப்பின் போது அதேபகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டதாக காவல்துறை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்ட ஐஸ் போதைப்பொருட்கள் குறித்த வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு, அதனை விநியோகிப்பதற்கு தயார் செய்யப்பட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.