யாழில் மற்றுமொரு வேட்பாளரும் உயிரிழப்பு!
பூநகரி சங்குப்பிட்டி பாலத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்த சுயேட்சை குழு வேட்பாளர் யோ.பியதர்சன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கடந்த 06ஆம் திகதி கிளிநொச்சியில் இருந்து தேர்தல் நடவடிக்கை தொடர்பில் யாழ்ப்பாணத்திற்கு சென்று மீண்டும் கிளிநொச்சி நோக்கி சென்று கொண்டிருந்த போது, அவர்கள் பயணித்த முச்சக்கர வண்டி – டிப்பர் வாகனத்துடன் விபத்துக்கு உள்ளானது.
குறித்த விபத்தில் சுயேட்சை குழு 03இன் தலைவரான சுந்தரலிங்கம் செல்வகுமார் , வேட்பாளரான யோ.பியதர்சன் ஆகியோரும் , இவர்களுடன் இணைந்து பயணிந்த த. டர்சிகன் என்பவருமே காயமடைந்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி பியதர்சன் உயிரிழந்துள்ளார்.
அதேவேளை நேற்றைய தினம் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் விடுதலைப்புலிகள் மக்கள் பேரவை சார்பில் போட்டியிடும் யாழ்பாணத்தை சேர்ந்த அகஸ்தீன் மக்டொனால்ட் (வயது 58) என்பவரும் மாரடைப்பால் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.