இலங்கை பெண் லொஸ்லியா காதலுக்கு பிரேக்-அப்! ஷாக் கொடுத்த கவின்...நடந்தது என்ன?

இலங்கை பெண் லொஸ்லியா காதலுக்கு பிரேக்-அப்! ஷாக் கொடுத்த கவின்...நடந்தது என்ன?

நீண்ட இடைவெளிக்குப் பின்னர் தற்போது காதல் குறித்து கவீன் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

முதலில் தான் சிங்கள் என்பதை உறுதி செய்து கொள்வதாக கூறிய கவின், அதன் பின்னர் காதல் என்பது பற்றி ஒவ்வொரு வயதிலும் ஒரு புரிதல் உள்ளது என்றும், காதல் என்பது உண்மையாக நேசிக்கக்கூடிய விஷயம் என்றும், கடைசிவரை உண்மையாக இருக்க வேண்டும் என்பது தான் காதல் என்றும் கூறியுள்ளார்.

அப்படிப்பட்ட உண்மையான காதலை நான் தேடி கொண்டிருக்கிறேன் என்றும் கண்டிப்பாக ஒருநாள் உண்மையான காதல் எனக்கும் கிடைக்கும் என்று நான் நம்புகிறேன் என்றும் கவின் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி என் வேலையையும் நான் காதலிக்கிறேன் என்றும் ஏனென்றால் அதுதான் நமக்கு கடைசிவரை சோறு போடுகிறது என்று கூறியுள்ளார்.  

ஒரு உண்மையான காதலை தேடி கொண்டிருக்கிறேன் என்று கவின் கூறியதிலிருந்து இலங்கை பெண் லொஸ்லியா காதலை அவர் பிரேக்-அப் செய்து விட்டதாக தெரிகிறது. இதனால் ரசிகர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.  

இதேவேளை, பிக் பாஸ் மூலம் புகழுக்கு சென்ற லொஸ்லியா இது வரை காதல் குறித்து கருத்து வெளியிட வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.