பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா?

பிக்பாஸ் அல்டிமேட்டில் இந்த வாரம் வெளியேறுவது இவர்தானா?

டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் இந்த வார நாமினேஷன் லிஸ்டில் ஜூலி, சுஜா, அபினை, தாடி பாலாஜி, தாமரைச்செல்வி, பாலாஜி முருகதாஸ் ஆகிய 6 பேர் இடம் பெற்றுள்ளனர்.

இதில் யாருக்கு மக்கள் குறைந்த ஓட்டுக்களை அளிக்கிறார்களோ, அவர்கள் இந்த வாரம் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்படுவார்கள். ஆனால் அதற்கெல்லாம் முன்பாக பிக் பாஸ் அல்டிமேட் போட்டியாளர்கள் கணிப்பின்படி தாமரைச்செல்வி இந்த வாரம் எலிமினேட் ஆக அதிக வாய்ப்பிருப்பதாக பேசிக் கொண்டிருக்கின்றனர்.

ஏனென்றால் எலிமினேஷன் நெருங்கும் சமயத்தில் பிக்பாஸ் காலையில் போடும் வேக்கப் சாங் மூலம் போட்டியாளர்கள் யார் இந்த வாரம் வெளியேற போகின்றனர் என தீர்மானிப்பார்கள். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் ஈசன் படத்தில் இடம்பெற்றிருக்கும் ‘வந்தானம்மா வந்தானம்மா’ என்ற நாட்டுப்புற பாடல் ஒலித்தது.

இதை வைத்துப் பார்க்கும்போது தாமரைச்செல்விக்கும் இந்த பாடலுக்கும் சம்பந்தம் இருப்பதாக பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் வத்திக்குச்சி வனிதா மற்றும் விஷ பாட்டில் அனிதா இருவரும் புரளியை கிளப்பி விடுகின்றனர்.

இப்படி பிக் பாஸ் போடும் பாடல்களை வைத்து யார் வெளியேற போவார்கள் என்பதை சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் சீசன்5 நிகழ்ச்சியின் போட்டியாளரான இமான் அண்ணாச்சி துவங்கிய இந்த செயல், தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டிலும் தொடர்கிறது.

இதனால் பிக்பாஸ் அல்டிமேட் போட்டியாளர்களும் தாமரைச்செல்வி தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என உறுதி செய்துள்ளனர். இருப்பினும் மக்கள் மட்டுமே இதை தீர்மானிக்க முடியும் என்றும் ஒரு சில போட்டியாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.