தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா! அதிரடியாக குறும்படம் போட்ட பிக் பாஸ்....அதிர்ந்து போன போட்டியாளர்கள்

தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் ஆட்டத்தை ஆரம்பித்த வனிதா! அதிரடியாக குறும்படம் போட்ட பிக் பாஸ்....அதிர்ந்து போன போட்டியாளர்கள்

பிக்பாஸ் அல்டிமேட்டில் டிரெண்டிங் பிளேயராக வனிதா  தெரிவு செய்யப்பட்ட நிலையில் அவருக்கு பல சலுகைகளை பிக்பாஸ் வழங்கியுள்ளார்.

இன்றைய நிகழ்ச்சியில் இந்த வாரத்திற்கான டிரெண்டிங் பிளேயராக வனிதா தெரிவு செய்யப்பட்டார்.

அவர் தொடர்பான குறும்படம் ஒன்று போட்டு காட்டப்பட்டது.

அது மட்டும் இல்லை பிக் பாஸில் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் இவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

தடை செய்யப்பட்ட அறையில் ராஜ மரியாதை கொடுக்கும் விதமாக இவருக்கு இரண்டு பணியாட்களை அவர் தெரிவு செய்து கொடுக்கலாம். சுஜா மற்றும் பாலாஜியை வனிதா தெரிவு செய்தார்.

அது மட்டும் இல்லை, டிரெண்டிங் பிளேயர் என்பதால் அவரை யாரும் நொமினேட் செய்ய முடியாது. இனி வரும் ஒவ்வொரு வாரமும் டிரெண்டிங் பிளேயர் இவ்வாறு தெரிவு செய்யப்படுவார்கள் என்பதையும் பிக் பாஸ் அறிவித்துள்ளார்.