பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதாவை எச்சரித்த கமல்! அடங்கிய சக போட்டியாளர்கள்;

பிக்பாஸ் அல்டிமேட்டில் வனிதாவை எச்சரித்த கமல்! அடங்கிய சக போட்டியாளர்கள்;

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியானது 24 மணிநேரமும் டிஸ்னி ப்ளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது. இந்நிகழ்ச்சி துவங்கியது முதலே பரபரப்பு பஞ்சமில்லாமல் போய் கொண்டிருக்கிறது.

தினம் ஒரு விஷயத்திற்காக சண்டை, வாக்குவாதம், இதற்கு இடையே டாஸ்க் மோதல்கள் வேறு என்று ரசிகர்களை மகிழ்விப்பதற்காக பல விஷயங்களை நாடகம் போல் செயல்படுத்தி வருகின்றனர்.

ஆனால், முதல் வாரத்தில் யார் வெளியேறப்போகிறார்கள் அதன் வெளிப்பாடாக தான் முதல் வாரத்தில் வெளியேற போகிறவர் யார் என்பது கடைசி வரை மாறிக் கொண்டே இருந்தது.

அதன்படி சுரேஷ் சக்கரவர்த்தி இந்த வாரம் வெளியேறுவார் எனக்கூறப்படுகிறது. இதெல்லாம் ஒரு பக்கம் இருந்தாலும், இன்றைக்கான ப்ரோமோ நிகழ்ச்சியில் பேசிய கமல், கொடுத்த பொருளை திருப்பி வாங்க மாட்டாங்க என பேசினார்.

மேலும், வனிதாவை தவிர வேறு யாராவது இருந்தால் இந்த ரியாக்‌ஷன் வந்திருக்குமா? என கேட்டார். அதன்பின்னர் உங்க தைரியத்தையும், புரட்சியை பெரிய விஷயத்துக்கு பயன்படுத்துங்க எனக்கூறினார்.

அதற்கு இது சும்மா ஒரு டிரைலர் தான் எனக்கூற, காபியை வைச்சுக்கிட்டு வார்ம் அப் பண்ணக்கூடாது சிந்திடும் என எச்சரித்துள்ளார்.