தனுஷுடன் வாழ சம்மதித்த ஐஸ்வர்யா: ஆனால் பின்னணியில் அரங்கேறிய சோகம்?

தனுஷுடன் வாழ சம்மதித்த ஐஸ்வர்யா: ஆனால் பின்னணியில் அரங்கேறிய சோகம்?

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவின் விவாகரத்து அறிவிப்பு பிரச்சினை தற்போது இணையத்தில் பயங்கரமாக பேசப்பட்டு வருகின்றது.

இருவரும் காதலித்து திருமணம் செய்ததோடு 18 ஆண்டுகள் வாழ்ந்துள்ள நிலையில், இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். ஆனால் கடந்த ஜனவரி மாதம் 17ம் திகதி இரவு சமூகவலைத்தளங்களில் தாங்கள் பிரிவதாக இருவரும் அறிவிப்பு வெளியிட்டனர்.

இவர்களின் பிரிவிற்கு காரணம் என்ன? மீண்டும் ஒன்று சேர்வார்களா? என ரசிகர்கள், குடும்பத்தினர், நண்பர்கள் என அனைவரின் எதிர்பார்ப்பாக இருந்து வருகின்றது.

இந்நிலையில் சமீபத்தில் ஐஸ்வர்யா தனது தந்தை ரஜினிக்கு போனில் தொடர்பு கொண்டு பேசிய போது, கோபத்தில் தந்தை சத்தமிட்டதுடன், முகத்தில் அறைந்தாற்போல் போனை துண்டித்துவிட்ட நிகழ்வு வைரலாகியது.

பின்பு தந்தையின் கோபத்தினை தணிக்க, அவரது விருப்பப்படி சேர்ந்து வாழ விருப்பப்பட்டு கஸ்தூரி ராஜாவிடம் தொடர்பு கொண்டு பேசியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆனால் சேர்ந்து வாழ தனுஷ் விருப்பமில்லை என்று கூறிவிட்டாராம். அடம்பிடித்த தனுஷ் பின்பு தந்தை கஸ்தூரி ராஜாவின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டு சேர்ந்து வாழ சம்மதம் கூறியுள்ளார்.

இதைக்கேட்ட கஸ்தூரி ராஜா ஐஸ்வர்யாவிடம், நீங்கள் ஒன்றாக மகன்களை கூட்டிட்டு திருப்பதி சென்று வாருங்கள். இதனை பத்திரிக்கை உலகம் பார்த்தாலே உங்களது பிரச்சினை முடிவுக்கு வந்துவிடும் என்று கூறிய நிலையில், ஐஸ்வர்யாவும் சம்மதம் தெரிவித்து அதற்கான ஏற்பாடுகளை செய்ததாக கூறப்படுகின்றது.

ஆனால் இதனை கேள்விப்பட்ட தனுஷ் கோபத்தின் உச்சத்திற்கு சென்று, யாரை கேட்டு முடிவு எடுத்தீர்கள்... மீண்டும் சேர்ந்து வாழ துளியும் விருப்பமில்லை... தன்னை வற்பறத்தாதீர்கள் என்று கோபமாக பேசியுள்ளாராம்.

இதனால் கஸ்தூரி ராஜா மற்றும் ஐஸ்வர்யா இருவரும் கடும் மனவருத்தத்தில் இருப்பதாக தற்போது இணையத்தில் தகவல் வைரலாகி வருகின்றது.