197 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

197 சிறைக்கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு

74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு 197 கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கவுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பின் 34 ஆவது சரத்தின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி பொதுமன்னிப்பு வழங்கப்படுகிறது.

இதன்படி, மஹர சிறைச்சாலையில் 20 கைதிகளும், கேகாலை சிறைச்சாலையில் 18 கைதிகளும், வெலிக்கடை சிறைச்சாலையில் 17 கைதிகளும், களுத்துறை சிறைச்சாலையில் 13 கைதிகளும், போகம்பரை சிறைச்சாலையில் 11 கைதிகளும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 11 கைதிகளும், வாரியபொல சிறைச்சாலையில் 10 கைதிகளும் என 197 சிறைக்கைதிகள் விசேட மன்னிப்பில் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலை தலைமையகம் தெரிவித்துள்ளது.