ஏழரையை கூட்டிய வனிதாவையே ஓவர்டேக் செய்த தாமரை! அலறும் பிக் பாஸ் வீடு.....அப்படி என்ன செய்தார் தெரியுமா ?

ஏழரையை கூட்டிய வனிதாவையே ஓவர்டேக் செய்த தாமரை! அலறும் பிக் பாஸ் வீடு.....அப்படி என்ன செய்தார் தெரியுமா ?

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கடந்த இரண்டு நாட்களாக வனிதா பிடித்து வைத்திருந்த இடத்தை இன்று ஒரே நாளில் தாமரை பிடித்து விட்டார்.

அவர் செய்த காரியத்தால் ட்விட்டரில் #Thamarai ஹேஷ்டேக்கை அவரது ரசிகர்கள் டிரெண்டிங் ஆக்கி உள்ளனர்.

இதை பார்த்த பலரும் ஆச்சரியம் தெரிவித்து வருகிறார்கள்.

தற்போதைய நிலவரப்படி வனிதா தான் ஓட்டு சதவீதத்தில் கடைசியில் இருக்கிறார்.

ஆனால் அவரை வெளியேற்ற மாட்டார்கள் என அனைவருக்கும் தெரியும். பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி துவங்கிய இந்த இரண்டு நாட்களில் அனைத்து ப்ரோமோக்களிலும் வனிதா தான் இடம்பிடித்து வந்தார்.

இரண்டு நாட்களில் ப்ரோமோவிலேயே அவர் செய்த அலம்பல்களை பார்த்து பார்வையாளர்கள் கடுப்பாகி விட்டனர். அதிலும் நேற்று காஃபிக்காக காலையிலேயே அவர் கூட்டிய ஏழரை, இவர் எதற்காக பிக்பாசிற்கு வந்தார் என அனைவரையும் கேட்க வைத்து விட்டது.  

இன்று காலையில் அபிராமி, அனிதா, பாலாஜி, சுரேஷ் சக்கரவர்த்தி என்ற பலரும் பேசினார்கள்.

இருந்தாலும் அவைகள் நொட்டிசன்கள் கண்டு கொள்ளவில்லை. ஆனால் அத்தனை பேரும் தன்னை திரும்பி பார்க்கும் அளவிற்கு செய்து விட்டார் தாமரை. சுருதியை கேள்விக் கேட்டுக் கொண்டிருந்த தாமரை, திடீரென திரும்பி அபினய்யிடம் ஏன் கேவலமாக முழிக்கிறாய் என கேட்டார்.

அவருக்கு பதிலுக்கு நீங்க ஏன் என்னை பார்க்குறீர்கள், அங்கு பார்த்து கேள்வி கேளுங்கள் என்றார். தாமரையும், சாதாரணமாக பார்ப்பதற்கும், கேவலமாக பார்ப்பதற்கும் எனக்கு வித்தியாசம் தெரியும் என்கிறார்.

இந்த விவாதத்தில் மற்றவர்கள் சப்போர்டிற்கு வருவார்கள் என தாமரை எதிர்பார்த்தாரா என தெரியவில்லை. ஆனால் அது போல் யாரும் வரவில்லை. அது அப்படியே அமைதியாக ப்ரஸ் மீட்டில் அபினையிடம் மனைவி குறித்து அதிரடி கேள்வி எழுப்பி திக்குமுக்காட வைத்துள்ளார்.

பிக் பாஸ் வீட்டை விட்டு சென்ற பிறகு உங்க பொண்டாட்டி என்ன சொன்னார். திறும்ப வரும் போது என்ன கூறினார் என்று அதிரடி கேள்வி கேட்க அதற்கு பதில் கூற முடியாது என்று அபினைய் தெரிவித்து விட்டார்.

இதனை பார்த்த ரசிகர்கள் அப்போது அபினைய் மனைவியை பிரிந்த செய்தி உண்மையா என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.