அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம்: ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி

அம்பலமாகிய அபிராமி நிரூப்பின் காதல் விவகாரம்: ஒட்டுமொத்த போட்டியாளர்களுக்கும் ஏற்பட்ட அதிர்ச்சி

பிரபல ரிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில், தற்போது டிஸ்னி பிளஸில் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகின்றது.

பிக்பாஸ் நிகழ்ச்சியினை போன்று கடந்த ஞாயிற்றுகிழமை பிரம்மாண்டமாக ஆரம்பித்த இந்நிகழ்ச்சியில், இதுவரை பிக்பாஸிற்கு சென்ற போட்டியாளர்களில் சிலர் உள்ளே சென்றுள்ளனர்.

இந்த நிகழ்ச்சி டிவி ஷோக்களில் ஒரு மணி நேரம் இல்லாமல் 24 மணி நேரமும் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினத்தில் கொடுக்கப்பட்ட டாஸ்கில் பல உண்மைகள் வெளியாகியது.

ஆம் நிரூப்பின் முன்னாள் காதலி யாஷிகா மட்டும் தான் என்று தெரிந்த நிலையில், அபிராமியும் நிரூப்பின் முன்னாள் காதலி என்ற உண்மையை நிரூப் நேற்று உடைத்துள்ளார்.

பிக்பாஸ் அல்டிமேட்டில் நிரூப் அபிராமியையும், அபிராமி நிரூப்பையும் நாமினேட் செய்தனர். நாமினேஷனின் போது நிரூப், நான் அபிராமி உடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்தேன். அப்போது இருந்த அபிராமி இப்போது இல்லை. அவர் நிறைய மாறி விட்டார். அவர் வாழ்க்கையில் என்ன நடந்தது? என்று எனக்கு தெரியவில்லை. அவரிடம் நான் இங்க பேசவும் இல்லை. அதனால் அவரை நாமினேட் செய்கிறேன் என்று நிரூப் செய்திருக்கிறார்.

இப்படி ஒரு நிலையில் நிரூப்பிடம் முன்னாள் காதலி பற்றி கேள்வி அபிராமி கேட்டுள்ளார். நேற்றைய டாஸ்கில் பத்திரிகையாளர் அணியில் இருந்த அபிராமி ”உங்களுக்கு கன்டஸ்டண்ட் லிஸ்ட் தெரியாமலேயே உள்ளே வந்த நீங்கள், உங்களோட முன்னால் காதலியை பார்த்த உடனே என்ன மாதிரி இருந்தது என்று கேட்டுள்ளார்.

அதற்கு பதில் அளித்த நிரூப், அது நீங்க தான், ஆனா பழைய நினைவுகள் எல்லாம் வந்து போச்சி, நான் பேச முயற்சி பண்ணேன்... ஆனாலும் ஒன்றாக இருக்கவிருக்கிறோம் இந்த வீட்டில்... பாப்போம், என்று பேசி முடித்தார்.

தற்போது யாஷிகா, நிரூப் இருவரும் நல்ல நண்பர்களாகவே இருந்து வருகின்றனர். ஆனால், அந்த நட்பு அபிராமியுடன் நிரூப்பிற்கு இல்லை என்பது தெளிவாக தெரிகிறது. போக போக என்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

காணொளியை இங்கே அழுத்திப் பார்க்கவும்...