
Smocking அறையில் முன்னாள் காதலருடன் அபிராமி: வெளியான காணொளி!
நடிகை அபிராமி தனது முன்னாள் காதலன் நிரூப் மற்றும் சக போட்டியாளர்களான அபிநய், ஷாரிக் ஆகியோருடன் இணைந்து சிகரெட் புகைக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி 24 மணி நேரமும் நேரலையாக ஒளிபரப்பாகி வருகின்றது. இதில் சினேகன், சுஜா வருணி, ஜூலி, தாடி பாலாஜி, ஷாரிக், அபிராமி, வனிதா, அனிதா, சுரேஷ் சக்ரவர்த்தி, பாலாஜி முருகதாஸ், சுருதி, நிரூப், தாமரைச் செல்வி, அபிநய் என மொத்தம் 14 போட்டியாளர்கள் களமிறங்கியுள்ளனர்.
குறிப்பாக இதில் கலந்துகொண்டுள்ள நிரூப்பும், அபிராமியும் முன்னாள் காதலர்கள் என்பது தெரியவந்துள்ளது. ஆம் 3 வருடம் காதலித்த இவர்கள், பின்னர் பிரேக் அப் செய்து பிரிந்தனர்.
பிக்பாஸ் வீட்டில் புகைபிடிப்பதற்கு என தனியாக ஒரு சிறிய அறை இருக்கும். அந்த அறையினுள் போட்டியாளர்கள் புகைபிடிப்பதை இதுவரை ஒளிபரப்பியது இல்லை.
ஆனால் தற்போது நடைபெறும் அல்டிமேட் நிகழ்ச்சி ஓடிடி-க்கானது என்பதால், அந்த காட்சிகளை எடிட் செய்யாமல் நேரடியாக ஒளிபரப்பி உள்ளனர்.
இதில் நடிகை அபிராமி முன்னாள் காதலர் நிரூப் மற்றும் அபிநய், ஷாரிக் இவர்களுடன் சேர்ந்து புகைப்பிடித்துள்ள காட்சி வெளியாகியுள்ளது.
இந்த காட்சி ஒளிபரப்பப்பட்டதற்கு கடும் கண்டனம் ஒருபுறம் எழுந்து வந்தாலும், மறுபுறம் ஒரு பெண் எப்படி சிகரெட் பிடிக்கலாம் என அபிராமிக்கு எதிராக சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.