பிக்பாஸிடம் தாமரை கேட்ட வீட்டு பொருட்கள்: சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்த சக போட்டியாளர்! யார்னு தெரியுமா?

பிக்பாஸிடம் தாமரை கேட்ட வீட்டு பொருட்கள்: சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்த சக போட்டியாளர்! யார்னு தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான தாமரை பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது, அங்கிருந்த ஃபிரிட்ஜ், மைக்ரோவன் இவற்றினை சதாநேரமாக பிக்பாஸிடம் கேட்டுக்கொண்டே இருந்தார்.

இறுதிவரை வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட தாமரை, திடீரென வெளியேறினார். ஆனால் உள்ளே இருந்த போட்டியாளர்களிடம் ஒரு அருமையான உறவுமுறையை வைத்து பழகினார்.

ஆம் பிக்பாஸ் வீட்டிற்குள் தம்பி, தங்கை தாமரைக்கு மிக அதிகம். தனது வெகுளி பேச்சினால் அனைவரையும் கட்டிப்போட்ட தாமரைக்கு சக போட்டியாளர்கள் சர்ப்ரைஸ் கொடுத்துள்ளனர்.

தற்போது பிக்பாஸ் அல்டிமேட்டில் கலந்து கொண்டுள்ள தாமரை நேற்றைய தினத்தில் தனக்கு வருண் டபுள் டோர் கதவு வைத்த கருப்பு கலர் பிரிட்ஜ், ஓவன் எல்லாம் வாங்கி தந்தான்.

பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போது இதெல்லாம் நான் எடுத்துக்கொண்டு போவேன் என்று சொன்னதை கேட்டு வருண் நிகழ்ச்சிக்குப் பிறகு எனக்கு வாங்கித் தந்திருக்கிறான்.

இவ்வாறு தாமரை பேசிய காணொளியினை அவதானித்த ரசிகர்கள் வருணை வெகுவாக பாராட்டி வருகின்றனர்.