ஒப்பீட்டு ரீதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு!
இந்த வருடத்தின் ஆரம்பம் முதல் ஜனவரி மாதம் இறுதி வரை நாட்டில் 7,702 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரியில் 2,122 டெங்கு நோயாளர்கள் மட்டுமே அடையாளம் காணப்பட்டனர்.
அதன்படி, 2021 ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் பாரிய அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்தை விட இவ்வருடம் 5,580 டெங்கு நோயாளர்கள் கூடுதலாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.