
வட்டுக்கோட்டையில் வீடுடைத்து திருட்டு
வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கரத்தை - ஓடக்கரை வீதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்றைய தினம் (01) நகையும் பணமும் திருட்டு போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
வீட்டின் உரிமையாளர் கிளிநொச்சி பனை தென்னை அபிவிருத்தி சங்கத்தில் கடமையாற்றி வருகின்ற நிலையில் அவர் கடமைக்கு சென்றிருந்தார்.
அவரது மனைவி, மகளை பாடசாலையில் இருந்து தனது தாயார் வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
இதன்போது வீட்டின் கண்ணாடி உடைக்கப்பட்டு ஒரு பவுண் நகையும் பத்தாயிரம் ரூபா பணமும் களவாடப்பட்ட விடயம் தெரியவந்துள்ளது.
அதனையடுத்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.