கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை
மாலபே, கெக்கிரிஹேன, தலங்கம பிரதேசத்தில் இருவருக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் கொஸ்வத்தை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் அதே பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கொலைக்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், சந்தேகநபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.
மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.