முதல் நாளே செருப்பை கையில் எடுத்த அபிராமி! அடுத்து நடந்த சம்பவம்

முதல் நாளே செருப்பை கையில் எடுத்த அபிராமி! அடுத்து நடந்த சம்பவம்

பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே அபிராமி செய்த செயலால் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டார்களாம்.

வெற்றிகரமாக 5 சீசன்களை கடந்து, பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது, இதில் 5 சீசன்களில் கலந்து கொண்ட அடாவடியான போட்டியாளர்கள் பங்கேற்றுள்ள நிலையில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது என்று தான் கூற வேண்டும்.

முதல் நாளே பல சர்ச்சைகளும் தொடங்கியுள்ளன, Smoking Roomக்குள் நிரூப், அபினய்யுடன் அபிராமியும் உடனிருந்த வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் முதல் நாளே அபிராமி செருப்பை கையில் எடுத்த காட்சிகளும் காட்டப்பட்டது, அதாவதுபிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதல் போட்டியாளராக வனிதா அறிமுகமானதும் அவரை தொடர்ந்து அபிராமி இந்த வீட்டிற்குள் அடியெடுத்து வைத்தார்.

வந்ததும் வனிதாவின் செருப்பை கையில் எடுத்து இவ்வளவு பெரிய ஸ்டூல்...சில நேரங்களில் இது ஆயுதமாக பயன்படும் என்று கூறியிருக்கிறார்.

இதுமட்டுமா முதல் வார தலைவராக சாரிக் வெற்றி பெற்றிருக்கும் நேரத்தில் அவருக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த கிரீடம் மற்றும் செங்கோல் போன்றவற்றை வனிதா தொட்டுப்பார்த்து உறுதிமொழி எடுத்துக் கொண்டிருக்கும்போதே, நான் இப்படியெல்லாம் இல்லை என்று அடாவடியாக அதை எடுத்து தலையில் மாட்டிக் கொண்டார்.

அபிராமியின் இந்த திடீர் செய்கை வந்த முதல் நாளே இப்படியா? என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர், விரைவில் இவரால் சண்டை நிச்சயம் எனவும் கூறிவருகின்றனர்.