
பாண்டியன் ஸ்டோர் முல்லைக்கு அடித்த ஜாக்பாட்! அவரே வெளியிட்ட முக்கிய தகவல்
பிரபல விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ்.
இத்தொடரின், முதலில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் நடிகை சித்ரா. இவர் மறைந்த பின், காவியா அறிவுமணி முல்லை கதாபாத்திரத்தில் நடிக்கத் துவங்கினார்.
இவர் இதற்கு முன்பு பாரதி கண்ணம்மா தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் மூலம் காவியா பெருமளவில் பிரபலமாகிவிட்டார்.
இந்நிலையில், தற்போது இவருக்கு வெள்ளித்திரையிலும், பட வாய்ப்புகள் குவிய தொடங்கியுள்ளன. காவியா அறிவுமணி நடிகர் மகேந்திரன் நடிப்பில் அருண் கார்த்திக் இயக்கவுள்ள புதிய படமான ரிப்பப்பரி என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.
மேலும், இந்த படம் காமெடி த்ரில்லராக உருவாகும் இப்படத்தில் அவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து காவியா தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பலரும் அவருக்கு வாழ்த்துக் கூறி வருகின்றனர்.