தனுஷ்- ஐஸ்வர்யா விவாகரத்தில் கசிந்த புது தகவல்
தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் பிரிவதாக அறிவித்த நிலையில் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
இவர்கள் இருவரும் பிரிவிற்கான காரணம் என்ன என்பது குறித்து கோலிவுட் வட்டாரங்கள் பரபரப்பாக பேசி வருகின்றனர்.
ஆனாலும் தனுஷ், ஐஸ்வர்யா இருவரும் விவாகரத்து செய்யவில்லை. வழக்கமான குடும்ப தகராறுதான். அவர்கள் இருவருக்கும் அறிவுரை வழங்கியுள்ளதாக தனுஷின் தந்தை கஸ்தூரி ராஜா தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தனுஷ் - ஐஸ்வர்யா விவாகரத்து முடிவு திடீரென எடுக்கப்பட்டது இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
ஆறு மாத காலமாகவே இருவரும் பேசி ஒருமனதாக முடிவு செய்த பின்னரே பிரிந்துள்ளதாக தகவல்கள் நெருங்கிய நட்பு வட்டாரங்கள் கூறியுள்ளனர்.
மேலும் இவர்களின் விவாகரத்து முடிவு மற்றவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தால், நாங்கள் எதிர்பார்த்த ஒன்றுதான் என்றும் தெரிவித்துள்ளனர்.
தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் இணைவார்கள் என எதிர்பார்த்து காத்திருந்து ரசிகர்களுக்கு இந்த தகவல் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.