
கொக்குவில் பகுதியில் அடையாளம் தெரியாத சிலர் வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல்!
யாழ்ப்பாணம் - கொக்குவில் பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் நேற்றிரவு நுழைந்த அடையாளம் தெரியாத சிலர், வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டின் முன்பாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களுக்கும் தீ வைத்து விட்டு, தப்பி சென்றுள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மகிழுந்து ஒன்று சேதமடைந்துள்ளதுடன், இரண்டு உந்துருளிகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மூன்று உந்துருளிகளில் வந்த ஆறுக்கும் மேற்பட்டவர்கள் இந்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கோப்பாய் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.