என்ன இவ்ளோ ஒல்லி ஆகிடீங்க! லொஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

என்ன இவ்ளோ ஒல்லி ஆகிடீங்க! லொஸ்லியாவின் புகைப்படத்தை பார்த்து அதிர்ந்து போன ரசிகர்கள்

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் இலங்கையை சேர்ந்த தமிழ் செய்தி வாசிப்பாளரான லொஸ்லியா மரியநேசன்.

இலங்கையை சேர்ந்த லொஸ்லியாவின் தாயும், தந்தையும் யாழ்ப்பாணத்தை சேர்ந்தவர்கள்.

குடும்ப கஷ்டத்தால் திரிகோணமலைக்கு குடிபெயர்ந்து அங்கேயே கல்வி கற்றார், தொடர்ந்து கொழும்புவில் வசித்து வந்த லொஸ்லியா செய்தி வாசிப்பாளராக பணியாற்றினார்.

இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 3ல் கலந்து கொண்டு உலக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார், நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினாலும் தமிழில் நடிக்க வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங்குடன் பிரண்ட்ஷிப் என்ற படத்தில் இணைந்து நடித்தார் லொஸ்லியா.
 
சமீபத்தில் இவர் நடித்த கூகுள் குட்டப்பா படத்திலிருந்து வெளியான அலை அலை பாடல் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் வெள்ளை நிற கவுனில் லொஸ்லியா வெளியிட்ட புகைப்படம் வைரலாகி வருகிறது, அதில் பயங்கர ஒல்லியாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.