யாழில் தொடருந்து மோதி மாணவன் பலி!

யாழில் தொடருந்து மோதி மாணவன் பலி!

யாழ்ப்பாணம். சாவகச்சேரியில், கொழும்பில் இருந்து யாழ் நோக்கி பயணித்த உருத்திரா தேவி தொடருந்தில் மோதுண்டு இளைஞரொருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (24) மாலை 6.15 மணியளவில் குறித்த விபத்து இடம்பெற்றுள்ளது. 

கொடிகாமத்தை சேர்ந்த  உதயகுமார் பானுசன் (18) என்ற மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சாவகச்சேரி இந்துக்கல்லூரிக்கு அருகில் தொடருந்து பாதையினை கடந்த வேளையில் தொடருந்தில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.