பாவனிக்கு இரவில் முத்தம் கொடுத்தது ஏன்? வலுக்கட்டாயமாக கொடுத்தேனா? அமீரின் பரபரப்பு பதில்

பாவனிக்கு இரவில் முத்தம் கொடுத்தது ஏன்? வலுக்கட்டாயமாக கொடுத்தேனா? அமீரின் பரபரப்பு பதில்

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தது குறித்து சர்ச்சையாக பேசப்பட்ட நிலையில், அமீர் இதற்கான விளக்கத்தினை கொடுத்துள்ளார்.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி கடந்த வாரம் முடிவடைந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு எண்ட்ரியாக உள்ளே சென்று டிக்கெட்டை தட்டிச் சென்று முதல் நபராக இறுதி போட்டிக்கு தகுதியானார்.

பின்பு குறித்த நிகழ்ச்சியில் 4வது இடத்தினை இவரும், மூன்றாம் இடத்தினை பாவனியும் பிடித்து வெளியேறினார்கள். பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் அமீர் பாவனியை காதலிப்பதாக கூறிய நிலையில், பாவனி நண்பராக இருக்கலாம் என்று கூறியுள்ளார்.

அமீர் பிக்பாஸ் வீட்டிற்கு செல்லும் அவர் குறித்து பலருக்கும் தெரியாமல் இருந்த நிலையில், அவரது குடும்ப கதையினைக் கேட்டு அவருக்கு பலரும் உறவுகளாக கிடைத்தனர்.

ஆனால் இடையே அமீர் பாவனிக்கு முத்தம் கொடுத்தது பரபரப்பாக பேசப்பட்டதுடன், அமீர் மீது தவறு என்றும் கூறப்பட்டது.

இதுகுறித்து அமீர் கூறுகையில், நான் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு உள்ளே போகும் போது பாவனி மட்டும் தனியாக உட்கார்ந்து அழுது கொண்டிருப்பார். தனியாக பிரச்சினையை சமாளிக்கும் அவரைப் பார்த்து பாவமாக இருந்தது.

பின்பு நான் வெளிப்படையாக பாவனியை காதலிப்பதாக கூறினேன், அவர் நட்பாக பழகலாம் என்று கூறினார். ஆனால் முத்தக்காட்சியை குறித்து எல்லோரும் சோசியல் மீடியாவில் பல்வேறு விதமாக கருத்துக்களைக் கூறிவருகின்றனர்.

நான் அவருக்கு வலுக்கட்டாயமாக முத்தம் கொடுக்கவில்லை. அப்படி கொடுத்திருந்தால் பிரச்சினை ஏற்பட்டிருப்பதோடு, பாவனியும் எதிர்ப்பு தெரிவித்திருப்பார்.

நான் கொடுக்கும் போது அவரும் எதுவும் சொல்லவில்லை, தடுக்கவும் இல்லை. அப்படி இருக்கும்போது நான் குற்றம் செய்தது போல் பேசுகிறார்கள். அப்போது இருக்கும் மனநிலையில் என் காதல் உணர்வில் நான் கொடுத்துவிட்டேன். எனக்கு அது தவறாகவே தெரியவில்லை.

இதை ஏன் இப்படி சர்ச்சையாக்கி வருகின்றனர் என்று தனது கருத்தினை கூறியுள்ளார்.