விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர்.. என்ன ஆனது?

விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகர் அர்னால்ட்.. என்ன ஆனது?

ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் என்றால் தெரியாதவர்களே இருக்க முடியாது. இவரின் முழுபெயர் அர்னால்டு ஸ்வார்ஸ்னேக்கர், பாடி பில்டிங்கில் உலக சாதனை படைத்த இவருக்கு தமிழகத்தில் மிகப்பெரிய ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த நிலையில், நடிகர் அர்னால்ட் ப்ரன்வுட் என்ற பகுதியில் கார் விபத்துகுள்ளாகியுள்ளது. முன்னால் சென்று கொண்டிருந்த காரின் மீது அர்னால்டின் கார் மோதி உள்ளது.

 

இதில் முன்னால் சென்று கொண்டிருந்த காரில் இருந்தவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது, அர்னால்டிர்க்கு சிறிது காயம் ஏற்பட்டது. விபத்து குறித்து தெரிவித்த காவல்துறை அர்னால்டு மீது தவறு உள்ளது என்றும் இடது பக்கம் திரும்பும் போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.

இதைக்கண்ட ரசிகர்கள் பலரும் அர்னால்ட் உடைய உடல் நலம் குறித்து விசாரித்து வருகின்றனர்.