ஆரம்பத்தில் செட் ஆகாது என்று கூறிய தனுஷ்: வற்புறுத்திய தந்தை! வெளியான உண்மை

ஆரம்பத்தில் செட் ஆகாது என்று கூறிய தனுஷ்: வற்புறுத்திய தந்தை! வெளியான உண்மை

தனுஷ் தான் நடிப்பதற்கு தந்தையின் வற்புறுத்தலே காரணம் என்று தான் எவ்வாறு நடிப்பிற்கு வந்தேன் என்பதைக் குறித்து வெளிப்படையாகக் கூறியுள்ள தகவல் வைரலாகி வருகின்றது.

முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் தனுஷின் விவாகரத்து பிரச்சினையே சமூகவலைத்தளங்களில் அதிகமாக பேசப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தனுஷ் குறித்த எந்த தகவல் வெளியே வந்தாலும், அது ரசிகர்களால் வைரலாக்கப்படுவதுடன், தீயாய் பரவவும் செய்கின்றது.

நகர் தனுஷ் தனது 17 வயதுதில் துள்ளுவதோ இளமை படத்தில் அறிமுகமாகிய நிலையில், திருடா திருடி என்ற படம் இவரை பெரிய ஹீரோ அளவிற்கு உயர்த்தியது.

அதன் பின்பு பல படங்களில் நடித்த தனுஷிற்கு ஆடுகளம் மற்றும் அசுறன் படத்திற்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது.

தமிழ் மட்டமுின்றி தற்போது ஹாலிவுட் வரை சென்று தனது திறமையினால் முன்னணி இடத்தினை பிடித்திருக்கும் தனுஷ் நடிகர் மட்டுமின்றி, பாடலாசிரியர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத்தினைக் கொண்டு பிரபலமாகி வருகின்றார்.

இந்நிலையில் இவர் சினிமாவிற்கு வந்தது எப்படி என்ற தகவலை தனுஷ் கூறியுள்ளார். நடிப்பில் எந்தவொரு ஆர்வம் இல்லாமல் இருந்த தன்னை தனது தந்தையே நடிகனாக்க ஆசைப்பட்டுள்ளாராம்.

தனது உடல் அமைப்பிற்கு நடிப்பு செட் ஆகாது என்று கூறியுள்ளார். அவரது தந்தை கஸ்தூரி ராஜாவே இவருக்குள் ஒரு நடிகன் இருப்பதை உணர்ந்து நடிப்பதற்கு வற்புறுத்தியுள்ளார்.

இறுதியில் அப்பாவின் வற்புறுத்தலால் நடிக்க வந்த இவர் இன்ற மிகப்பெரிய நட்சத்திரமாக உலாவரும் நிலையில், இவரது தனிப்பட்ட வாழ்க்கை சற்று பிரச்சினையை சந்தித்துள்ளது பலருக்கும் வேதனையை அளித்துள்ளது.