நீராடச் சென்ற இரு சிறுமிகள் மாயம்

நீராடச் சென்ற இரு சிறுமிகள் மாயம்

வெலிகம கடலில் நீராடச் சென்ற 12 மற்றும் 15 வயதுடைய இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளனர்.

வெலிகம கடலில் இன்று (23) மூன்று சிறுமிகளும் 21 வயதுடைய யுவதியும் குளித்துக் கொண்டிருந்த போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

நால்வரும் கடலில் அடித்துச் செல்லப்பட்டதுடன், 21 வயதுடைய சிறுமியும் 14 வயது சிறுமியும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

வெலிகம, முகுதுகம பிரதேசத்தை சேர்ந்தவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.

காணாமல் போன சிறுமிகளை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.