பிக்பாஸ் பிரபலம் பாவனிக்கு கொரோனா

பிக்பாஸ் பிரபலம் பாவனிக்கு கொரோனா

வெளியே வந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில் பாவனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பாவனி கொரோன சிம்டம்ஸ் இருப்பதால் வீட்டில் தன்னை தனிமைப்டுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஐதராபாத்தில் பேஷன் டிசைனிங் படித்து முடித்த பவானி ரெட்டி, மாடலிங் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன் மூலம் தெலுங்கு, தமிழில் சில கதாபாத்திரங்களில் நடித்து வந்த பவானி ரெட்டிக்கு சின்னத்திரை வாய்ப்பு தேடி வந்தது.

விஜய் டி.வி.யி. ஒளிபரப்பாகி வரும் சின்ன தம்பி சீரியலில் நந்தினி என்ற ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் பவானி ரெட்டி. இதற்கு முன்னதாக ரெட்டை வால் குருவி, தவணை முறை வாழ்க்கை ஆகிய சீரியல்களில் நடித்துள்ளார். சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார். கடந்த 2013ஆம் ஆண்டு இவருடன் சீரியலில் நடித்த பிரதீப் என்ற நடிகருடன் காதல் ஏற்பட்டு திருமணம் செய்து கொண்டார்.

4 வருடங்களில் இருவரது வாழ்க்கையிலும் பிரச்சனைகள் விஸ்வரூபம் எடுக்க 2017ம் ஆண்டு பிரதீப் தற்கொலை செய்துகொண்டார். குடும்ப நண்பரான ஆனந்த் என்பவரை பவானி ரெட்டி இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக கடந்த ஆண்டு தகவல்கள் வெளியாகின.

:தற்போது விஜய் டிவியில் பரபரப்பாக ஒளிபரப்பாகி கொண்டிருந்த பிக் பாஸ் சீசன் 5-ல் பாவனி போட்டியாளராக கலந்து கொண்டு ரசிகர்களின் மனதை வென்றுள்ளார். 106 நாட்கள் எலிமினேஷன் ஆகாமல் தக்கப்பிடித்த பாவனி 3 வது இடத்தை பிடித்துள்ளார்.

இந்நிலையில் வெளியே வந்து சில நாட்களே கடந்துள்ள நிலையில் பாவனிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இது குறித்து பதிவிட்டுள்ள பாவனி கொரோன சிம்டம்ஸ் இருப்பதால் வீட்டில் தன்னை தனிமைப்டுத்தி கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.