கிணற்றில் விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு!

கிணற்றில் விழுந்து 16 வயது சிறுமி உயிரிழப்பு!

தனது வீட்டில் வளர்க்கப்படும் ஆட்டுக்குட்டிக்கு தங்குமிடம் அமைப்பதற்காக குழி தோண்டச் சென்ற 16 வயது சிறுமி ஒருவர் கிணறொன்றில் விழுந்து உயிரிழந்துள்ளார்.

இரவு நேரத்தில் குறித்த சிறுமி கிணறு ஒன்றுக்கு அருகாமையில் குழி தோண்டுவதற்கு முயற்சித்தபோது கால் தடுக்கி விழுந்ததால், இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்தவர் யாழ்ப்பாணம் - நெல்லியடி பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தின் பின்னர் சிறுமியை மீட்ட உறவினர்கள் அவரை பருத்தித்துறை மருத்துவமனையில் அனுமதித்தனர்.

எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

சம்பவம் தொடர்பில் நெல்லியடி காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.