300 விக்கெட் கிளப்பில் இணைந்தார் ட்ரென்ட் பவுல்ட்

300 விக்கெட் கிளப்பில் இணைந்தார் ட்ரென்ட் பவுல்ட்

வங்காளதேச அணிக்கு எதிராக 5 விக்கெட் வீழ்த்தியன் மூலம் 300 டெஸ்ட் விக்கெட்டுகளை வீழ்த்திய நான்காவது நியூசிலாந்து பந்துவீச்சாளர் என்ற பெருமையைப் ட்ரென்ட் பவுல்ட் பெற்றார்.

நியூசிலாந்து- வங்காளதேசம் அணிகளுக்கு இடையேன 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிறிஸ்ட்சர்ச்சில் நேற்று தொடங்கியது. நியூசிலாந்து 6 விக்கெட் இழப்பிற்கு 521 ரன்கள் குவித்த நிலையில் முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. 

இதையடுத்து வங்காளதேசம் அணி முதல் இன்னிங்சை ஆடியது. நியூசிலாந்து அணியின் சிறப்பான பந்து வீச்சால் அந்த அணி 126 ரன்னில் ஆல் அவுட் ஆனது. 
 
நியூசிலாந்து தரப்பில் ட்ரென்ட் பவுல்ட் 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன் மூலம் நியூசிலாந்து அணியின் 300 விக்கெட் வீழ்த்திய பட்டியலில் 4-வது வீரராக ட்ரென்ட் பவுல்ட் இடம் பிடித்தார். 

சர் ரிச்சர்ட் ஹாட்லீ, டேனியல் வெட்டோரி, டிம் சவுத்தி ஆகியோர் முதல் மூன்று இடங்களில் உள்ளனர்.