அலறித்துடித்த பயணிகள்... பல உயிர்களை பலி கொண்ட நீர்வீழ்ச்சி! நெஞ்சை பதை பதைக்கும் காட்சி

அலறித்துடித்த பயணிகள்... பல உயிர்களை பலி கொண்ட நீர்வீழ்ச்சி! நெஞ்சை பதை பதைக்கும் காட்சி

தென்கிழக்கு பிரேசிலில் நீர்வீழ்ச்சிக்கு கீழே மோட்டார் படகுகளின் மேல் பாறை சுவர் இடிந்து விழுந்ததில் பலர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பிரேசிலின் மினாஸ் ஜெரைஸ் மாநிலத்தில் உள்ள கேபிடோலியோ நீர்வீழ்ச்சியில் இந்த பயங்கரமான விபத்து ஏற்பட்டது.

திடீரென பாறை உடைந்து, தண்ணீரில் விழுவதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் கூச்சலிட்டனர்.

 சம்பவத்தின் போது கோபுரம் போன்ற ஒரு பாறை அடுக்கு திடீரென்று பெயர்ந்து ஏரியில் விழுந்துள்ளது. இச்சம்பவத்தில் குறைந்தது இரு படகுகள் அந்த பாறை அடுக்கில் சிக்கியிருக்கலாம் என்றே அஞ்சப்படுகிறது.