பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய தாமரை: வைரலாகி வரும் காட்சி

பிக்பாஸ் வீட்டிலிருந்து ஆட்டோவில் வீடு திரும்பிய தாமரை: வைரலாகி வரும் காட்சி

பிக்பாஸ் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறிய தாமரை ஆட்டோவில் வீட்டிற்கு சென்றுள்ள காணொளி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 95 நாட்கள் வரை நின்று விளையாடியவர் தான் நாடக கலைஞர் தாமரை.

ஆரம்பத்தில் விளையாட்டு புரியாமல் தவித்து கண்களில் கண்ணீர் ததும்பிய இவர் நாட்கள் செல்ல செல்ல தன்னிச்சையாக விளையாட ஆரம்பித்தார்.

கிராமத்தில் இருந்து பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த இவருக்கு ஆங்கில மொழி பேச்சு இடையூராக இருந்து வந்த நிலையில், சக போட்டியாளர்கள் இதனை எளிதாக புரிய வைத்தனர்.

மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு தாமரை பணப்பெட்டியை எடுத்துக்கொண்டு வெளியேறுவார் என்று எதிர்பார்த்த நிலையில், சிபி வெளியேறினார்.

இந்த பணத்தினை எடுத்துக்கொண்டு தாமரை வெளியேறாமல் இருந்து, இன்று எவிக்ட் ஆகி வெளியேறியுள்ளது அவரது ரசிகர்களுக்கு பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பிக்பாஸை விட்டு வெளியேறிய தாமரை ஆட்டோ ஒன்றில் தனது வீட்டிற்கு சென்றதும், அங்கு முதலில் விளக்கேற்றி கும்பிட்ட காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.