யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிப்பு

யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிப்பு

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராக வடமாகாணத்தின் சுகாதார சேவைகள் பிரதிப்பணிப்பாளர் வைத்தியர் கே.நந்தகுமாரன் தற்காலிகமாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தனவினால் நேற்றையதினம் இந்த நியமனக் கடிதம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவர் இன்றையதினம் யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் கடமைகளைப் பொறுப்பேற்கின்றார்.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளராகச் செயற்பட்ட வைத்தியர் த.சத்தியமூர்த்தி மீண்டும் வெளிநாடு சென்றுள்ள காரணத்தினால் தற்காலிகமாக இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.