டெனிஸ் பந்துக்குள் மறைத்து களுத்துறை சிறைக்குள் வீசப்படும் ஹெரோயின் மற்றும் கைபேசிகள்

டெனிஸ் பந்துக்குள் மறைத்து களுத்துறை சிறைக்குள் வீசப்படும் ஹெரோயின் மற்றும் கைபேசிகள்

களுத்துறை சிறைச்சாலைக்கு ஹெரோயின் போதைப்பொருள் மற்றும் ஏனைய சட்டவிரோத பொருட்களை கொண்டு செல்லும் திட்டமிட்ட செயலில் ஈடுபடும் சந்தேக நபர்கள் சிலர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை வடக்கு பொலிஸார் இவ்வாறான 15 பேரை கைதுசெய்துள்ளனர். இவர்கள் டெனிஸ் பந்துக்குள் மறைத்து ஹெரோயின், புகையிலை மற்றும் கையடக்கதொலைபேசி ஆகியவற்றை களுத்துறை சிறைச்சாலை மதிலுக்கு வெளியில் இருந்து சிறைச்சாலைக்குள் வீசுவதாக தெரியவந்துள்ளது.

அதற்கமைய, சிறைச்சாலைக்குள் வீசுவதற்கு தயாராக வைத்திருந்த ஒரு தொகை போதைப்பொருள், கையடக்க தொலைபேசிகள், ஒரு தொகை புகையிலை மற்றும் டெனிஸ் பந்துகள் என்பன பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன.

சிறைக்குள் டென்னிஸ் பந்தை வீசுவதற்காக ஒரு கைதியிடமிருந்து ரூ .15 ஆயிரம் தொகை வசூலிக்கப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் களுத்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.