ஸ்ரீலங்கா இராணுவம் பொதுமக்களுக்கு விடுத்துள்ள அறிவிப்பு
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் அடிப்படையற்ற தகவல்களை நம்பவேண்டாமென ஸ்ரீலங்கா இராணுவம் பொதுமக்களை கேட்டுள்ளது.
இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் சந்தன விக்கிரமசிங்க தெரிவிக்கையில்
அரசாங்க தகவல் திணைக்களம் மற்றும் கொரோனா ஒழிப்பு தேசிய செயலணிமூலம் வெளியிடப்படும் தகவல்களை மாத்திரம் நம்புமாறு இராணுவம் பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நபர்களுடன் தொடர்புகளை பேணியவர்கள் அடையாளம் காணப்படுகின்றனர். அவர்கள் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
கொரோனா வைரஸ் சமூக பரவலை தடுக்க தனிமைப்படுத்தல் செயற்பாடே வெற்றிகரமான நடவடிக்கையாகுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் தனிமைப்படுத்தப்படுவோர் அனைவரையும் கொரோனா வைரஸ் தொற்றாளர்களாக அர்த்தப்படுத்த முடியாதென சந்தன விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.