தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல்

 இலங்கையில் (sri Lanka) தங்கத்தின் விலையானது கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகின்றது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சடுதியாக குறைவடைந்த தங்க விலை மீண்டும் அதிகரித்த நிலையில் தொடர்ந்து இன்றும் உயர்வடைந்துள்ளது.

இன்றைய (10.01.2025) நிலவரத்தின் படி ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 792,107 ரூபாவாக காணப்படுகின்றது.

அத்தோடு, 24 கரட் தங்க கிராம் (24 karat gold 1 grams) 27,950 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) 223,550 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Rate In Sri Lanka World Gold Market

22 கரட் தங்க கிராம் (22 karat gold 1 grams) 25,630 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் (22 karat gold 8 grams) 205,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை (21 karat gold 1 grams) 24,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் (21 karat gold 8 grams) இன்றையதினம் 195,650 ரூபாவாக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொழும்பு செட்டியார் தெரு தங்க நிலவரங்களின் படி 24 கரட் தங்கப் பவுண் (24 karat gold 8 grams) ஒன்று 214,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்க விலையில் தொடரும் மாற்றம் : வாங்கவுள்ளோருக்கு முக்கிய தகவல் | Gold Price Rate In Sri Lanka World Gold Market

அதேவேளை, அங்கு 22 கரட் தங்கப் பவுண் ஒன்று (22 karat gold 8 grams) 198,000 ரூபாவாக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.