மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது

மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது

ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை மிரிஹான பொலிஸாரால் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

தனது அயல் வீட்டில் வசிக்கும் நபர் மீது தாக்குதல் நடத்தியக் குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

மகிந்தவின் நெருங்கிய உறவினர் அதிரடியாக கைது | Former Ambassador Udayanga Weeratunga Arrested

இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில், நேற்றையதினம் மிரிஹான பொலிஸாரிடத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

 இதனையடுத்து குறித்த முறைப்பாடு தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், இன்று காலை உதயங்க வீரதுங்க பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இதேவேளை, கைது செய்யப்பட்ட உதயங்க வீரதுங்க, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் நெருங்கிய உறவினர் என்பதும் குறிப்பிடத்தக்கது.