நித்யாமேனனின் லிப்லாக் காட்சி, அதிலும் பெண்ணுடன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

நித்யாமேனனின் லிப்லாக் காட்சி, அதிலும் பெண்ணுடன்: அதிர்ச்சியில் ரசிகர்கள்

கடந்த 2011 ஆம் ஆண்டு வெளிவந்த ’வெப்பம்’ என்ற திரைப்படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் காஞ்சனா-2, 24, இருமுகன், மெர்சல், சைக்கோ உள்ளிட்ட பலர் தமிழ் திரைப்படங்களிலும் மலையாளம் மற்றும் தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்தவர் நித்யா மேனன்.

இவர் திரைப்படங்களில் கூட கவர்ச்சியாக இதுவரை நடிக்காத நிலையில் வெப்தொடர் ஒன்றில் பெண் ஒருவருக்கு உதட்டுடன் உதடு முத்தம் கொடுக்கும் லிப்லாக் காட்சியில் நடித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

அமிதாப் பச்சனின் மகன் அபிஷேக் பச்சன் நடித்து வரும் ’ப்ரீத்’ என்ற வெப்தொடரில் நித்யா மேனன் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். இந்த தொடரின் இரண்டாவது எபிசோடில் நித்யா மேனன் தன்னுடன் நடித்த சக நடிகையான சுருதி என்பவருக்கு உதட்டுடன் உதடு சேர்த்து லிப்லாக் முத்தம் கொடுக்கும் காட்சியும் அதன் பின் இருவரும் ஆடைகளை களைந்து கட்டி பிடிப்பது போன்ற காட்சியில் இருப்பது ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

திரைப்படங்களில் கவர்ச்சியாக கூட இதுவரை நடித்திராத நித்யா மேனன், எப்படி லிப் லாக் முத்தக்காட்சியில் நடித்து உள்ளார் என்று ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். மேலும் திரைப்படங்கள் போன்று ஓடிடி தளத்திற்கு சென்சார் இல்லாததால் இது போன்ற காட்சி அமைக்கப்படுவதாகவும், ஓடிடி தளத்தில் பெரும்பாலும் இளைஞர்கள் மட்டுமே பார்ப்பதால் அவர்களை கவர்வதற்காக இதுபோன்ற காட்சிகள் அதிகம் வருவதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.