
தான் வெட்டிய மரத்திலேயே சிக்கி உயிரை விட்ட குடும்பஸ்தர்!
யாழ்ப்பாணம் - தெல்லிப்பழை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்லிப்பழை, சூளாம்பதி கிராமத்தை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மரம் முறிந்து வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் தெல்லிப்பழை, சூழாம்பதியைச் சேர்ந்த 41 வயதுடைய எட்வேட் மதிவண்ணன் என்ற குடும்பஸ்தரே உயிழந்துள்ளார்.
மரம் வெட்டும் கூலித் தொழிலாளியாகிய இவர் நேற்றைய தினம் அளவெட்டி, மாசியப்பிட்டி பகுதியில் மரத்தினை வெட்டச் சென்றுள்ளார். அப்போது மரத்தை இழுத்து வீழ்த்த முற்பட்ட போது மரத்தினுள் வீழ்ந்து அகப்பட்டுள்ளார்.
இதனால் படுகாயமடைந்த அவர் நேற்று மாலை யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அங்கு சிகிச்சை பயனின்றி நேற்று இரவு உயிரிழந்துள்ளார்
உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனையின் பின் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெல்லிப்பழை பொலிசார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.