கட்டான - தெல்கஸ் சந்தியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐவர் படுகாயம்
கட்டான - தெல்கஸ் சந்திக்கு அருகில் நேற்று(25) இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் அவர்களது இரண்டு பிள்ளைகள் ஆகியோர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
நத்தார் பண்டிகையை முன்னிட்டு தேவாலயத்திற்கு சென்று உந்துருளியில் மீள வீடு திரும்பியவேளை, மகிழுந்து ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
விபத்தில் காயமடைந்த 8 மற்றும் 12 வயதுகளை உடைய இரண்டு சிறுவர்களும் மேலதிக சிகிச்சைகளுக்காக கொழும்பு ரிஜ்வே சீமாட்டி சிறுவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்தில் காயமடைந்த தந்தை மற்றும் மகிழுந்தின் சாரதி ஆகியோர் நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.