கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

கொவிட் மரணங்கள் மேலும் அதிகரிப்பு

நாட்டில் மேலும் 20 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்று (23) இந்த மரணம் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,852 ஆக பதிவாகியுள்ளது.

இதேவேளை, கொரோனா தொற்றில் இருந்து மேலும் 323 பேர் பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 558,850 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 582,149 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.