விவசாயத்துறை அமைச்சர் வழங்கியுள்ள உறுதி
அடுத்த வருடம் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படாது என தான் உறுதி வழங்குவதாக விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு மாவட்டத்திலும் 90 தொடக்கம் 95 வீதமான நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளமையினால் நாட்டில் உணவுத் தட்டுப்பாடு ஏற்படும் என சிலர் கூறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போதைய நெருக்கடிக்கு தீர்வு காண விவசாய அமைச்சின் செயலாளர்களை பதவி நீக்கம் செய்வதை விட்டுவிட்டு மாறாக விடயத்திற்கு பொறுப்பான அமைச்சர் பதவி விலகல வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்துள்ளார்.