டிசம்பரில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையில் அதிகரிப்பு!
டிசம்பர் மாதத்தின் முதல் 20 நாட்களில் 47,120 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் இலங்கை வந்துள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. அதன்படி, இந்த வருடம் ஜனவரி முதல் இதுவரை 152,109 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையை கவர்ச்சிகரமான சுற்றுலா மையமாக மேம்படுத்தும் வகையில் ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டம் அடுத்த வருடம் முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
நாட்டுக்கு அதிகமான சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் நோக்கில், 2022 ஆம் ஆண்டு 'இலங்கையை காண்போம்' என்ற ஆண்டாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
உலகளாவிய மேம்பாட்டுத் திட்டத்துக்கு அமைவாக இந்த பிரகடனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்கள்மூலம் இலங்கையை மேம்படுத்துவது பெரிதும் ஊக்குவிக்கப்படவுள்ளதுடன், மேலும் இந்த ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு நிகழ்ச்சிகள் வெளிநாடுகளில் சுற்றுலா மற்றும் விமானப் போக்குவரத்து துறை தொடர்பான சர்வதேச மாநாடுகள் மற்றும் கண்காட்சிகளில் செயல்படுத்தப்படும்.
சமூக ஊடகங்கள் மூலமாக இலங்கை தொடர்பான ஊக்குவிப்பு வேலைத்திட்டங்கள் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் அதேவேளை, வெளிநாடுகளில் நடைபெறும் சுற்றுலா மற்றும் விமான சேவை தொடர்பான சர்வதேச மாநாடுகள், கருத்தரங்குகள் மற்றும் கண்காட்சிகளில் இந்த ஒருங்கிணைந்த ஊக்குவிப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.