நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் மேலும் மூவர் அடையாளம்
இலங்கையில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் மேலும் 3 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
சூடானில் இருந்து வந்த இருவரும், தன்சானியாவில் இருந்து வந்த ஒருவருமே இவ்வாறு ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆய்வு நிறுவகம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் அடையாளம் காணப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 7ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் ஏற்கனவே, 4 பேர் ஒமைக்ரொன் கொவிட் திரிபுடன் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.
அவர்களில் ஒருவர் நாட்டை விட்டு வெளியேறியதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நேற்று 713 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 580,922 ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன், கொவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 311 பேர் குணமடைந்துள்ளனர்.
அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 558,226 ஆக அதிகரித்துள்ளது.