இரு அமைச்சுகளுக்கு புதிய செயலாளர்கள் நியமனம்
வெகுஜன ஊடகத்துறை அமைச்சின் செயலாளராக அனுஷ பெல்பிட்ட நியமிக்கப்பட்டுள்ளார்.
எதிர்வரும் முதலாம் திகதி முதல் இந்த நியமனம் அமுலுக்கு வரும் என ஜனாதிபதியின் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் விவசாய அமைச்சின் செயலாளராக டி.எம்.எல்.டி.பண்டாரநாயக்க ஜனாதிபதியால் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.