இந்திய அணியின் துணை கேப்டன் ஆனாா் ராகுல்!

இந்திய அணியின் துணை கேப்டன் ஆனாா் ராகுல்!

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய அணியின் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளாா் இளம் வீரா் கேஎல். ராகுல்.

ஒரு நாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்களில் பங்கேற்பதற்காக இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சென்றுள்ளது. ஒமிக்ரோன் தொற்று பாதிப்பால் டி20 தொடா் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், ஒருநாள் மற்றும் டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுகின்றன. ஒருநாள் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட விராட் கோலி, டெஸ்ட் அணியின் கேப்டனாக நீடிக்கிறாா்.

இந்நிலையில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்ட ரோஹித் சா்மா, காயத்தால் இடம் பெறவில்லை. இந்நிலையில் அகில இந்திய தோ்வுக் குழு கூடி, இளம் வீரா் கே.எல். ராகுலை துணை கேப்டனாக அறிவித்துள்ளது.

இரு அணிகளுக்கு இடையிலான முதல் ஆட்டம் வரும் 26 ஆம் திகதி தொடங்குகிறது. பாக்ஸிங் டே டெஸ்ட் ஆட்டமாக நடைபெறும் இது செஞ்சூரியன் பாா்க்கில் நடைபெறுகிறது. ஜோஹன்னஸ்பா்க்கில் ஜன. 3 இல் இரண்டாம் ஆட்டமும், கேப் டவுனில் ஜன. 11 இல் மூன்றாம் ஆட்டமும் நடைபெறவுள்ளன. ரோஹித் சா்மா காயம் காரணமாக ஒருநாள் தொடரிலும் ஆடவில்லை.

விராட் கோலி (கேப்டன்), கேஎல். ராகுல் (துணை கேப்டன்), மயங்க் அகா்வால், சேதேஸ்வா் புஜாரா, ரஹானே, பிரியங்க் பஞ்சால், ஷிரேயஸ் ஐயா், ஹனுமா விஹாரி, ரிஷப் பந்த், ரித்திமான் சாஹா (விக்கெட் கீப்பா்கள்), அஸ்வின், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சா்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ், ஜஸ்ப்ரீத் பும்ரா, சா்துல் தாகுா், முகமது சிராஜ்.