மூங்கிலாறு பகுதியில் காணாமல் போயிருந்த சிறுமி சடலமாக மீட்பு
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு காவல்துறை பிரிவுக்குட்பட்ட மூங்கிலாறு பகுதியில் அண்மையில் காணாமல் போயிருந்த சிறுமி ஒருவர் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மூங்கிலாறு வடக்கு உடையார்கட்டு பகுதியைச் சேர்ந்த 12 வயதுடைய சிறுமி ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
குறித்த சிறுமி கடந்த 15ஆம் திகதி முதல் காணாமல் போனதாக புதுக்குடியிருப்பு காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதோடு புதுக்குடியிருப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.